Sunday, March 6, 2011

அதிர்ஷ்டத்தின் திறவுகோல்க

எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது
- ஷிவ்கரோ

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்? ஜாதகமாக? வாஸ்துவா? அதிர்ஷ்ட எண்களா? அதிர்ஷ்ட கற்களா? அதிர்ஷ்டத்தின் மூலம் எங்கே? அதை அடையும் வழி எங்கே? ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது.

1. பொறுத்திருக்க வேண்டும்:

அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்? நாம் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், தோல்வி என்ற வார்த்தையே வாழ்வில் தொல்லை தரக்கூடாது.

ஓடு தளத்தில் ஓடி வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில் தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் என விருபுகிறோம். அதையே அதிர்ஷ்டம் என போற்றுகிறோம்.

அதிர்ஷ்டம் யாருக்கும் வரலாம் அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம். ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும். சிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம்.

ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய பல வருடங்களாக நீங்கள் தூங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட கண் விழித்திருந்து தங்களை தாங்களே தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?

லாங் பெல்லோ

உயர்வு உள்ளல் Self Esteem

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு